உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உண்டியலில் திருடியவர் கைது

உண்டியலில் திருடியவர் கைது

உத்திரமேரூர்:சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனம்பாக்கம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், பூசாரி கோவிலை திறந்து பூஜை செய்ய வந்துள்ளார்.பின், கோவிலை திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 40, என்பவர் உண்டியலை உடைத்து, 7,000 ரூபாய் திருடியது தெரிந்தது. நேற்று காலை சாலவாக்கம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ