கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 47. இவரிடம், காஞ்சிபுரம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வீரா, 42. என்பவர், கத்தி முனையில், 1,600 ரூபாய் மிரட்டி பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து, ரமேஷ் அளித்த புகாரின்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வீராவை கைது செய்தனர். இவர் மீது, ஒரு கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.