பருவ மழை எதிரொலி குடை விற்பனை சூடுபிடிப்பு
காஞ்சிபுரம்:வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.மழையின் காரணமாக காஞ்சிபுரத்தில் வெளியில் நடமாடியோர் அவதிக்குள்ளாகினர் பருவமழையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பேன்ஸி ஸ்டோர், ஜெனரல் ஸ்டோர் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மழை சீசசனுக்கேற்பவாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களின் குடைகளை கடைக்கு வெளியே பார்வைக்காக வைத்துள்ளனர்.அதேபோல, நடைபாதை கடைகளிலும் வண்ணமயமான மீடியம் சைஸ் குடை 150 க்கும், நீளமான கம்பி உள்ள பெரிய குட்டை 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த நிறத்தில் உள்ள குடைகளை வாங்கிச்செல்கின்றனர். நேற்று முன்தினம் மழை பெய்ததால், குடை விற்பனை சூடுபிடித்தது. நேற்று மதியம் வரை மழை இல்லாததால், விற்பனை மந்தகமாக உள்ளது என, குடை வியாபாரிகள் தெரிவித்தனர்.