உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் கொசு புழுக்கள் ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு

கால்வாயில் கொசு புழுக்கள் ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு

முத்தியால்பேட்டை,:ஏரிவாய் கிராம கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு உருவாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமம், ஆலமரத் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து, வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில் 'கான்கிரீட்' கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. புகார் இக்கால்வாயில் விடப்படும் கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையான நீரோட்டம் ஏற்படுத்தவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கி, கொசு புழுக்கள் உருவாகி உள்ளதால், அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால், இப்பகுதியினருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படு வதால், ஏரிவாய் கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. வலியுறுத்தல் மேலும், மழை பெய்தால், கால் வாயில் தேங்கும் கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. எனவே, ஆலமரத் தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏரிவாய் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !