சுங்குவார்சத்திரம் சர்வீஸ் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதுார்:குண்டும் குழியுமான சுங்குவார்சத்திரம் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பிரிந்து, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியே, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் வல்லம் -வடகால் சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை, பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும், தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.எனவே, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.