உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெங்குடி வளைவில் எச்சரிக்கை பலகை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

வெங்குடி வளைவில் எச்சரிக்கை பலகை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்:வெங்குடி வளைவுகளில், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், பரமேஸ்வரமங்கலம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்துார் வரையில் விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், வாலாஜாபாத் புறவழிச் சாலை நிறைவு பெறவில்லை. இதனால், வெங்குடி அருகே துவங்கும் புறவழி சாலை அருகே, வாலாஜாபாத் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அபாயகரமான வளைவில் திரும்பி செல்கின்றன. இங்கு, எச்சரிக்கை பலகை இல்லை. மேலும், சாலை வளைவு குறுகலாக உள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது என தெரிவிக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, வெங்குடி வளைவில் ஆபத்தான வளைவு உள்ளது என, எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ