மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
16-Jun-2025
ஓரிக்கை:காஞ்சிபுரம் ஓரிக்கை வசந்தம் நகரில் சேதம்அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, ஓரிக்கை வசந்தம் நகரில் இருந்து, வளத்தோட்டம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை வளைவு பகுதியில், ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால், வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி பஞ்சராகின்றன.எனவே, ஓரிக்கை வசந்தம் நகரில் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
16-Jun-2025