உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தடுப்பு இல்லாத சிறுபாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஆராம்பாக்கம் கிராமத்தில் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், சாலமங்கலம் அடுத்த ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்லும், ஆரம்பாக்கம் பிரதான சாலை வழியி, நாள்தோறும் நுாற்றுகணக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட சிறுபாலத்தின் இருப்புங்களிலும் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக, தடுப்பு இல்லாத சிறுபாலத்தில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர உள்ள கால்வாயில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, உயிர்சேதம் ஏற்படும் முன், ஆரம்பாக்கம் சாலையோரம் உள்ள சிறுபாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை