உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓராண்டாக சாலையோரத்தில் பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ஓராண்டாக சாலையோரத்தில் பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர், :கட்டியாம்பந்தலில், கடந்தாண்டு பெய்த, 'பெஞ்சல்' புயல் மழையால், சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் அடுத்த, கட்டியாம்பந்தல் கிராமத்தில், பாப்பநல்லுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி, பாப்பநல்லுார், மேட்டுக்கொல்லை, காட்டுக்கொல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் சாலவாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு, 'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட மழையால், கட்டியாம்பந்தல் ஏரி பாசன கால்வாய் அருகே செல்லும் சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. மண் அரிப்பால் சேதமடைந்த சாலை, ஒராண்டாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கட்டியாம்பந்தல் பகுதியில் மழையால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ