உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து சாலவாக்கம் செல்லும் சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், திருமுக்கூடலை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து கனரக லாரிகளும் இந்த சாலையில் செல்கின்றன.இதனால், சாலை பல இடங்களில் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடை அருகே, சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சேதமடைந்த சாலை பள்ளத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தேங்கியுள்ள மழைநீரில் சிக்கி விழுகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை