மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்
10-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களிலே தேங்கி வந்தது.இதை தவிர்க்க, அப்பகுதிவாசிகள் மழைநீர் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2021 -- 22ம் நிதி ஆண்டில், 11.50 லட்சம் ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.தற்போது, மழைநீர் வடி கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல், மண் கொட்டி தூர்த்து பாதை அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், அப்பகுதியில் மழை நேரங்களில் மழைநீர் தடையின்றி செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் மழைநீர் வடிகால்வாயில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற முன்வருமாறு, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
10-Mar-2025