மேலும் செய்திகள்
உண்டியல் திறப்பு
17-Oct-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி, கடந்த ஜூன் மாதம் காணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.அதில், 17 லட்சத்து 3,808 ரூபாய் பணம், 54 கிராம் தங்கம், 1,400 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இதில், ஆய்வர் திலகவதி, கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Oct-2024