உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்

தேசிய அளவிலான ஓவியப்போட்டி காஞ்சி மாணவ -- -மாணவியர் சிறப்பிடம்

காஞ்சிபுரம்:தேசிய அளவிலான ஓவியப் போட்டிகளில், காஞ்சி மாணவ- - மாணவியர் சிறப்பிடம் பிடித்துள்ளனர். பிரபல ஸ்டேஷனரி மற்றும் ஓவியப் பொருட்களின் நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான ஆன்லைன் ஓவியப் போட்டிகள் சமீபத்தில் நடத்தியது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஓவியம் பயிற்சி பெற்ற மாணவ- - மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோல் ஆப் ஆர்ட்ஸ் இந்தியா என, அழைக்கப்படும் ஓவிய பயிற்சி பள்ளியைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் பங்கேற்றனர். இதில், ஆதித்யா இரண்டாவது பரிசும்; ஹர்ஷிகா மூன்றாவது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை