உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா செவிலியர் கல்லுாரியில் நாளை நவராத்திரி விழா

சங்கரா செவிலியர் கல்லுாரியில் நாளை நவராத்திரி விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில், நாளை துவங்கும் நவராத்திரி விழாவில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சங்கரா செவிலியர் கல்லுாரி தலைவர் பம்மல்.விஸ்வநாதன், முகாம் மேலாளர் ஜானகிராமன், சங்கரா கல்லூரி முதல்வர் கலைராம வெங்கடேசன் கூறியதாவது:காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரத்தை அடுத்த, நல்லுாரில் புதிதாக திறக்கப்பட்ட சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில் தங்கியிருந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். நாளை முதல், கல்லுாரி வளாகத்தில் நவராத்திரி திருவிழா துவங்கி, 13ம் தேதி நிறைவு பெறுகிறது.இதையொட்டி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மஹா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் பூஜையை தினசரி நடத்துவதோடு, நவராத்திரி நாட்களில் நவாவர்ண பூஜையும் நடத்துகிறார்.மேலும், நவராத்திரி திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் உலக நன்மைக்காக ஸ்ரீ வித்யா ஹோம், சண்டி ஹோமம், ருக்சம்ஹிதா ஹோமம் ஆகியனவும் நடைபெறுகிறது.நவராத்திரி நாட்களில் தினமும் இரவு கல்லாரி வளாகத்தில் முதல் மூன்று நாட்கள் பொம்மலாட்டம் மற்றும் பிற நாட்களில் பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியனவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !