உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் காஞ்சிபுரத்தில் துவக்கம்

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் காஞ்சிபுரத்தில் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் மத்திய அரசின் நக்சா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளை, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட யாகசாலை மண்டப தெருவில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.'இந்நிகழ்வில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், மேயர் மகாலட்சுமி, கவுன்சிலர்கள், அப்பகுதி வாசிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் இயக்கப்பட்டு, நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய சர்வே எண்ணுக்கு ஏற்ப வரைபடங்களை உருவாக்கி, அவற்றை சொத்துவரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக நகர் முழுதும் சர்வே துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் படம் எடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். நவீன நில அளவை கருவிகளை கொண்டு, நில அளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும்.நில அளவை செய்து தயார் செய்து வெளியடப்படும் வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்பட்டு, இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நில ஆவணங்கள் வெளியிடப்படும்.நக்சா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு, நகர மக்களுக்கு, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், உதவி இயக்குநர் (நில அளவை பதிவேடுகள் துறை) பச்சையப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ