உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பதிவேடு பராமரிப்பதில் அலட்சியம் உயரதிகாரி ஆய்வில் அம்பலம்

 பதிவேடு பராமரிப்பதில் அலட்சியம் உயரதிகாரி ஆய்வில் அம்பலம்

காஞ்சிபுரம்: சிமென்ட், கம்பி ஆகிய கட்டுமானப் பொருட்கள் வினியோகம் செய்யும் பதிவேடுகளை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை என, உயரதிகாரி ஆய்வில் குட்டு அம்பலமாகி உள்ளது. மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை துறை உதவி இயக்குநர் குமார் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ஆய்வு செய்தார். இதில், மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில அரசின் கனவு இல்ல திட்டம் ஆகிய வளர்ச்சி பணிகள் கணக்கு பதிவேட்டை ஆய்வு செய்தார். இதில், 80 டன் கம்பி; 1,000 மூட்டைகள் சிமென்ட் கணக்கு பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. மேலும், தினசரி அப்டேட்களை தவறாமல் பதிவு செய்யுங்கள் என, அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி கூறியதாவது: கம்பி, சிமென்ட் மூட்டைகள் காணவில்லை என, கூறுவது வதந்தியாகும். அவர், கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதில், சில பதிவு கள் பதிவு செய்யாமல் உள்ளது. அதை சரி செய்யுங்கள் என, அறிவுரை கூறிவிட்டு சென்றார்; வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிமென்ட், கம்பி ஆகிய கட்டுமானப் பொருட்களை, நேரடியாக கட்டுமானம் நடக்கும் இடங்களில் டெலிவரி செய்யப் படுகிறது. அதை, அந்தந்த பயனாளிகள் பதிவேட்டில் பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இனிமேல் தவறாமல் செய்யுங்கள் என, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை