உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெடுக வளர்ந்த புற்களால் நெட்டேரி கால்வாய் பாழ்

நெடுக வளர்ந்த புற்களால் நெட்டேரி கால்வாய் பாழ்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில் இருந்து, நெட்டேரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாய், சாலை தெரு பகுதியில் குறுக்கிடும் இடத்தில், சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் நீர்வழித் தடத்தை முறையாக பராமரிக்காததால், கோரை புற்கள் புதர் போல மண்டியுள்ளன.இதனால், மழைக்காலத்தில் இக்கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் சூழும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், மழைநீர் செல்லும் கால்வாயின் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ