உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊரக வளர்ச்சி சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

ஊரக வளர்ச்சி சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துசுந்தரம் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்திற்கு, மாவட்ட தலைவராக மீண்டும் முத்துசுந்தரம், செயலராக மாணிக்கவேல், பொருளாளராக கண்ணபிரான் மற்றும் நான்கு துணை தலைவர்கள், நான்கு இணை செயலர்கள் என, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி