உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நீச்சல் குளம், மேஜை பந்து பயிற்சி மையம் புதிதாக திறப்பு

 நீச்சல் குளம், மேஜை பந்து பயிற்சி மையம் புதிதாக திறப்பு

திருப்போரூர்: மேலக்கோட்டையூர் விளையாட்டு பல்கலையில், புதிய நீச்சல் குளம், முதன்மை நிலை மேஜை பந்து பயிற்சி மையத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை உள்ளது. இங்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீச்சல் குளம், 2 கோடி ரூபாய் மதிப்பில் முதன்மை நிலை மேஜை பந்து பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று திறந்து வைத்தார். அதேபோல், மேலக்கோட்டையூர் வி.ஐ.டி., பல்கலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவும் நடந்தது. 12,831 வார்டுகளுக்கு, 30 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ