சிறையில் நைஜீரிய பெண்கள் காதல் விவகாரத்தில் அடிதடி
புழல்: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா, 32, பிளாரட், 33, உட்பட மூன்று பேர், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, சென்னை புழல் பெண்கள் சிறையில் உள்ளனர். மேற்கூறிய இருவரும், புழல் சிறையில் கைதியாக உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரே நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பிளாரட், 'வீடியோ கால்' வாயிலாக, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதியிடம் பேசியுள்ளார்.இதனால் மோனிகா ஆத்திரமடைந்து, பிளாரட்டை அடித்து உதைத்து, அவரது உதட்டையும் கடித்துள்ளார். பலத்த காயமடைந்த பிளாரட்டை சிறை போலீசார் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.