உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின். நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், காஞ்சிபுரம் கிராமப்புறம் வட்டாரம் சார்பில், போஷன் அபியான் திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா. கல்லுாரி நிறுவனர் போஸ் தலைமையில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஊட்டச்சத்து நிபுணர் பாரதி ஆகியோர், வளர்இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்து கருத்துரையாற்றினர்.பல்வேறு ஆரோக்கிய ஊட்டச்சத்து உணவுகளின் கண்காட்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரா.சுஜாதா, கிராமப்புறம் ஒருங்கிணைந்த வட்டார ஒருங்கிணைப்பாளர் லோ.ஷைனி ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.இதில் கல்லுாரி துணை முதல்வர் முனைவர் பிரகாஷ், 100க்கும் மேற்பட்ட மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை