இறந்த கறவை மாடு அகற்றாததால் துர்நாற்றம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டு, வல்லப்பாக்கம் பகுதியில் அபிராமி நகர் உள்ளது. இங்குள்ள ரேஷன் கடை எதிரே, சாலையோர பொது இடத்தில், மூன்று நாட்களாக அடையாளம் தெரியாத கறவை பசு ஒன்று இறந்த நிலையில் உள்ளது.அந்த இறந்த மாடு, அகற்றப்படாதால் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றம் குடியிருப்பு பகுதியில் பரவுவதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.எனவே, இறந்த நிலையிலான மாட்டை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.