குட்கா விற்ற மூதாட்டி கைது
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பென்னலுார் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், விற்பனைக்காக வைத்திருந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள ஆன்ஸ், விமல், கூலிப் உள்ளிட்ட குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் மல்லிகா, 60, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.