உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதை ஓட்டுநரால் ஏரிக்குள் பாய்ந்த லாரி: ஒருவர் பலி

போதை ஓட்டுநரால் ஏரிக்குள் பாய்ந்த லாரி: ஒருவர் பலி

காஞ்சிபுரம், போதை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஏழு வாகனங்களை சேதப்படுத்தி ஏரிக்குள் கன்டெய்னர் லாரி பாய்ந்தது. இந்த கோர விபத்தில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், அனந்தபூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஈஸ்வர், 36, என்பவர், கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார். நேற்று மாலை 6:30 மணியளவில், பாலுச்செட்டிச்சத்திரம் பஜார் வீதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடியது. சாலை ஓரத்தில் நின்றிருந்த இரண்டு தனியார் பேருந்துகள், இரண்டு கார்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில், அந்த வாகனங்கள் சேதமடைந்தன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற கூத்திரமேடு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், 56, என்பவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி, தாமல் ஏரியில் பாய்ந்து கவிழ்ந்தது. பாலுச்செட்டிச் சத்திரம் போலீசார், லாரியில் இருந்த ஓட்டுநர் ஈஸ்வர் மற்றும் கிளீனர் சப்ஜீத் ஆகியோரை கைது செய்தனர். அப்போது, ஓட்டுனர் அதீத மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ