உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தநிலை கழிவுநீர் தொட்டி பொற்பந்தலில் விபத்து அபாயம்

திறந்தநிலை கழிவுநீர் தொட்டி பொற்பந்தலில் விபத்து அபாயம்

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம் பொற்பந்தல் கிராமத்தில் உள்ள அரசு துவக்க பள்ளி அருகே, அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.அங்கன்வாடி மையம் அருகே பழுதடைந்த சுகாதார கழிப்பறை வளாகம் உள்ளது. இந்த கழிப்பறை வளாகத்தின் கழிவுநீர் தொட்டி சேதமடைந்து, அதன் மீது கான்கிரீட் சிலாப் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது.இதில், அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த கழிப்பறை கழிவுநீர் தொட்டியை மூட, அப்பகுதிவாசிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திறந்தநிலையில் உள்ள கழிப்பறை கழிவுநீர் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை