உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாமல் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

தாமல் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், தாமல் ஊராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18.10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையை காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று திறந்து வைத்தார்.அதை தொடர்ந்து தாமல் ஊராட்சியில், 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மேல்கதிர்பூரில் ஊராட்சியில், 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.மேலும், காஞ்சிபுரம் ஒன்றியம், நரப்பாக்கத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள ரேஷன் கடை, திருப்பருத்திகுன்றம் ஊராட்சியில், 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு, காஞ்சிபுரம் தி.முக., - எம்.எம்.ஏ., எழிலரசன் அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை