உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு

பழங்குடியினர் குடியிருப்புகள் திறப்பு

உத்திரமேரூர், ஆலப்பாக்கத்தில் பழங்குடியினருக்கான அரசு தொகுப்பு வீடுகளை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியம், அண்ணாத்துார் ஊராட்சியில், ஆலப்பாக்கம் துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பழங்குடியினத்தை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு வீடு வழங்க ஊராட்சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 2024 -- 25 நிதி ஆண்டில், 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், தலா, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி, அன்னாத்துார் ஊராட்சி தலைவர் பாலு தலைமையில் நேற்று நடந்தது. ஒன்றியக் குழு துணை சேர்மன் வசந்தி, மாவட்ட கவுன்சிலர் சிவராமன் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை