உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் அவளூரில் துவக்கம்

நெல் கொள்முதல் நிலையம் அவளூரில் துவக்கம்

வாலாஜாபாத்:அவளூரில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த, அவளூர், கண்ணடியன்குடிசை, நெய்க்குப்பம் மற்றும் அங்கம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இக்கிராமங்களில் அறுவடையான நெல்லை, அவளூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். சொர்ணவாரி பட்ட சாகுபடிக்கு கடந்த மே, ஜூன் மாதங்களில் நடப்பட்ட நெல் பயிர்களை, விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இப்பகுதிக்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''ஒரு குவிண்டால் சன்னரக நெல் 2,545 ரூபாயாகவும், பொதுரக நெல் 2,500 ரூபாயாகவும் செப்., 1 முதல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படுகிறது. ''விவசாயத்திற்கு, அரசு தேவையான முக்கியத்துவம் அளிப்பதால், விவசாயிகள் தொடர்ந்து நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை