உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புத்தகரத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க ஊராட்சி தலைவர் மனு

புத்தகரத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க ஊராட்சி தலைவர் மனு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.இதில், பட்டா, பட்டா திருத்தம், வேலைவாயப்பு, ஆக்கிரமிப்பு, உதவித்தொகை, ரேஷன் அட்டை என, பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக, 507 பேர் மனு அளித்தனர்மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்ற அவர், அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று, மாற்றுத்திறனாளி அலுவலரிடம் வழங்கி நடவடக்கை எடுக்க அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், புத்தகரம் ஊராட்சி தலைவர் நந்தகுமார், கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.மனு விபரம்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட புத்தகரம் என்பது வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். எங்கள் ஊரில் புத்தர் சிலை அடையாளத்தை பாதுகாக்கும் வகையில், புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க, 2023ல், எங்கள் ஊருக்கு வந்த சுற்றுலா துறை செயலர், ஆய்வு நடத்தினர். அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் புத்த பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தகரம் கிராமத்தில் புத்தர் பண்பாட்டு மையம் அமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ