உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் பாப்பநல்லுார் விவசாயிகள் அவதி

நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் பாப்பநல்லுார் விவசாயிகள் அவதி

உத்திரமேரூர்:பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் திறக் காததால் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த, பாப்பநல்லுாரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு நெல் அறுவடை பருவத்திற்கும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். தற்போது, பாப்பநல்லுாரில் சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய வசதியாக, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால், வாணிப கழக அதிகாரிகள் இன்னமும் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காமல் உள்ளனர். இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக குவியலாக கொட்டி வைத்துள்ளனர். எப்போதுதான் விற்பனை செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து, நுகர் பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாப்பநல்லுாரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 'அ தன்படி, பருவகால பட்டியல் எழுத்தர் விரைவாக நியமிக்கப்பட்டு, இன்னும் இரண்டு நாட்களுக்குள் நெல் கொள்முதல் பணி துவங்கப்படும்' என் றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !