உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடையை மறைத்து கட்சி பேனர் கருவேப்பம்பூண்டி பயணியர் அவதி

நிழற்குடையை மறைத்து கட்சி பேனர் கருவேப்பம்பூண்டி பயணியர் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.இந்நிலையில், இந்த பயணியர் நிழற்குடை முன், முழுதுமாக மறைத்து, சமீப நாட்களாக அரசியல் கட்சியினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.இதனால், பேருந்துக்காக வருபவர்கள் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணியர் சாலையிலே நின்று பேருந்து பிடித்து செல்கின்றனர்.இப்பகுதியில், பேனர் வைப்பது குறித்த நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு வருகிறது.எனவே, நிழற்குடை முன் வைக்கப்பட்டுள்ள, விளம்பர பேனரை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை