உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி - செங்கல்பட்டு சாலையில் நிழற்குடையின்றி பயணியர் தவிப்பு

காஞ்சி - செங்கல்பட்டு சாலையில் நிழற்குடையின்றி பயணியர் தவிப்பு

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த ரவுண்டானா சாலையின் ஒரு புறத்தில், காஞ்சிபுரம் செல்வதற்கான பேருந்து நிறுத்தமும், மற்றொரு புற சாலையோரத்தில் செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்தமும் உள்ளது.இதில், காஞ்சிபுரம் செல்வதற்கான நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. எனினும், செங்கல்பட்டு செல்வதற்கான ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்ல பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் மற்றும் திருமுக்கூடல், உள்ளாவூர் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகளில் செல்லும் பயணியர் மழை மற்றும் வெயில் நேரங்களில் நிழற்குடை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, செங்கல்பட்டு செல்வதற்கான அப்பேருந்து நிறுத்த சாலையோரத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ