மேலும் செய்திகள்
வடிகால்வாயில் பிளாஸ்டிக் குப்பையால் சீர்கேடு
16-May-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, திட்டிவாசல் சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.சமீபத்தில் பெய்த மழையின் போது, மழைநீருடன் கழிவுநீர் கலந்து திட்டிவாசல் சாலை நடுவே குட்டை போல தேங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக சாலை நடுவே தேங்கியுள்ள கழிவுநீரால், அவ்வழியாக செல்லும் பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத்தடுமாறி சாலை நடுவே உள்ள பள்ளத்தில் விழுந்து வருகின்றனர். அதேபோல, பாதசாரிகள் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.எனவே, சாலை நடுவே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-May-2025