மழைநீர் வெளியேறாததால் கால்வாயை சேதப்படுத்திய மக்கள்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், குரு கோவிலுக்கு செல்லும் சாலை என, அழைக்கப்படும் கால்வாய் தெரு உள்ளது.இந்த தெருவில், மழைக்காலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கும். இந்த நீரில் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகள் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. மழை நீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல தரப்பினர் கோரிக்கை விடுத்தினர். இதை ஏற்று, 15வது மத்திய நிதிக்குழு மானியத்தில், 13.50 லட்ச ரூபாய் செலவில், மழைநீர் வடி கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.பணி ஒப்பந்தம் எடுத்தவர், மழைநீர் வடிந்து செல்வற்கு ஏற்ப கால்வாய் கட்டி உள்ளார். மழைநீர் கால்வாயில் வடிந்துசெல்வதற்கு ஏற்ப வசதி ஏற்படுத்தவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சிலர் கால்வாய்க்கு போடப்பட்ட கான்கிரீட் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இருப்பினும், மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால், தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள்உற்பத்தியாகி நோய்த் தொற்று பரவும் அபாயத்தில் உள்ளது. எனவே, மழைநீர் வடிந்து செல்வதற்கு ஏற்ப வடிகால்வாய் வசதிஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.