உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம்; 322 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம்; 322 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர்அலுவலக வளாகத்தில்உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 322 மனுக்களை பெற்றார்.அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த மிஷன் சக்தி குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில், வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்ட தம்மனுார் கிராமத்தில், 25 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என, கிராமத்தினர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ