மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 390 மனுக்கள் ஏற்பு
27-May-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 527 மனுக்கள் பெறப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பட்டா கேட்டும், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும் என, பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 527 பேர் மனு அளித்தனர்.மனுக்களை பெற்றுக் கொண்ட, கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.மாற்றுத்திறனாளி பயனாளிகள் மூவருக்கு ஸ்கூட்டரும், 12 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், வீல் சேர் வேண்டி மனு அளித்த பாஸ்கரன் என்பவருக்கு, வீல் சேர் ஒன்றும் வழங்கப்பட்டது.விவசாயிகள் புகார்காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சாந்தாங்கல் கிராமத்தில், மார்ச் மாதம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை விற்பனை செய்தோம். தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நடத்திய இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து, நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை.நாங்கள் வட்டிக்கு கடன் வாங்கி வாழ்வாதாரம் தேடும் நிலையில் உள்ளோம். நெல் விற்பனை செய்த பணத்தை உடனடியாக வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-May-2025