மேலும் செய்திகள்
புதிதாக அமைக்கப்பட்ட சாலை 2 மாதங்களிலேயே சேதம்
10-Jul-2025
உத்திரமேரூர:பேரணக்காவூர் சாலையை, 80 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் கிராமத்தில் இருந்து, பேரணக்காவூர் செல்லும் சாலை ௨ கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதியில் வசிப்போர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்து இருந்ததால், மழை நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2025 --- 26ம் நிதி ஆண்டில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பேரணக்காவூர் சாலை சீரமைப்பு பணிகள், கடந்த மாதம் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. தற்போது, சாலையில் சிறு பாலங்கள் கட்டப்பட்டு ஜல்லிகள் கொட்டி சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.
10-Jul-2025