உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி கட்டடங்கள் கட்ட அனுமதி

பள்ளி கட்டடங்கள் கட்ட அனுமதி

உத்திரமேரூர்:-கம்மாளம்பூண்டி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் 2.35 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்ட, பொதுப்பணி துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, க ம்மாளம்பூண்டி, உத்திர மேரூர் ஆகிய இடங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் உள்ள கட்டடங்கள், 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டவை. தற்போது, பள்ளி கட்டடங்கள் சேதம்அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே, மேற்கண்ட இரண்டு பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 -- 26ம் நிதி ஆண்டில், பொதுப் பணித் துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு, கம்மாளம்பூண்டியில் நான்கு வகுப்பறை கட்டடமும், உத்திரமேரூரில் ஆறு வகுப்பறை கட்டடமும் கட்ட 2.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடும் பணியில் பொதுப் பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணி முடிக்கப்பட்டு, பள்ளி கட்டடங்கள் பயன் பாட்டுக்கு வர உள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ