உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாடகை வீடுகளில் குடியிருப்போர் இலவச மனை பட்டா கோரி மனு

 வாடகை வீடுகளில் குடியிருப்போர் இலவச மனை பட்டா கோரி மனு

வாலாஜாபாத்: அய்யம்பேட்டையில், வாடகை வீடுகளில் வசிப்போர் தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வாலாஜா பாத் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது அய்யம்பேட்டை ஊராட்சி. இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 30 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் குழுவாக வாலாஜாபாத் தாசில்தார் அலுவலகம் வந்து, அய்யம் பேட்டை அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த ஜெயந்தி தலைமையில் துணை தாசில்தாரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: அய்யம்பேட்டையில், பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசிக்கும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன. இக்கிராமத்தைச் சார்ந்த அரசு பள்ளிகளில் குழந்தைகள் பயின்று வருகின்றனர். கூலி தொழிலாளர்களான எங்களுக்கு வீட்டு வாடகை கட்டணம் பாரமாக உள்ளது. நீண்ட காலமாக இப்பகுதியில் குடும்பத்தோடு நிரந்தரமாக வசித்து வரும் எங்களுக்கு, வீட்டு மனை பட்டா இல்லாததால் பல அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே, வாடகை வீடுகளில் மாறி, மாறி வசிக்கும் எங்களுக்கு சொந்தமாக குடியிருக்க அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசின் மற்ற சலுகைகள் கிடைக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி