பகுதிநேர ரேஷன் கடை கேட்டு கலெக்டரிடம் மனு
காஞ்சிபுரம்:செங்கல்ராயபுரம் கிராமத்திற்கு, பகுதி நேர ரேஷன் கடை துவக்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் லெனின்குமார் அளித்த மனுவில் கூறியதாவது:பூசிவாக்கம் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதில், செங்கல்ராயபுரம், விநாயகபுரம் மேட்டு தெரு ஆகிய பகுதிவாசிகளும் ரேஷன்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதுபோன்ற கிராமத்தினர், 3 கி.மீ., துாரம் கடந்து வந்து, ரேஷன்பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஒரு சில மாதங்களில், கிராம மக்கள் வருவதற்குள் பொருட்கள் தீர்ந்துவிடுகிறது. இதனால், செங்கல்ராயபுரம், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பரிதவிக்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, செங்கல்ராயபுரம் கிராமத்தில் தனியாக பகுதி நேர ரேஷன் கடை துவக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.