உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுாரில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

மதுாரில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.மனுவில் கூறியுள்ளதாவது:உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளிக்கூடம் பகுதியையொட்டி, சர்வே எண்: 395/13ல், அரசுக்கு சொந்தமான காலிமனை உள்ளது.அந்த மனையை, மதுார் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, தென்னங்கன்று உள்ளிட்டவை நடவு செய்து வருகிறார். தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற நாட்களில் தேசியக்கொடி ஏற்ற போதிய இடவசதி இல்லை.மேலும், பள்ளி மாணவர்கள் இறை வணக்கம் செலுத்தவும், விளையாட்டு மைதானத்திற்கும் இடம் இல்லாமல் நெருக்கடி இருந்து வருகிறது.எனவே, தனி நபர் ஆக்கிரமித்துள்ள அரசு காலி இடத்தை மீட்டு, பள்ளி பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை