குரு கோவில் வளாகத்தில் 1,200 பனை விதைகள் நடவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள குரு கோவில் என, அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் வளாகத்தில், 1,200 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டன. விதைகள் தன்னார்வ அமைப்பின், ஐந்தாவது ஆண்டு 'ஒரு லட்சம் பனை விதைகள் நடவு திருவிழா' வின் ஒன்பதாம் கட்ட களப்பணியாக காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், உள்ள குரு கோவில் என, அழைக்கப்படும் கைலாசநாதர் சமேத தட்சிணாமூர்த்தி கோவில் வளாகத்தில், 1,200 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டது. இதில், விதைகள் தன்னார்வ அமைப்பினருடன், ஹிந்து சமய அறநிலையத் துறையினர் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில் வளாகங்களில், இலவசமாக பனை விதைகள் நடவு செய்ய விரும்புவோர் 88702 81261 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் தெரிவித்துள்ளார்.