உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருமுக்கூடல்:சுற்றுச்சூழல் மேம்படுத்தும் வகையில் திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருமுக்கூடலை சுற்றி தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளின் புகை மற்றும் புழுதியால் காற்று மாசு உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழும்பி வருகின்றன. காற்று மாசு குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாணவர்களுக்கு பொறுப்புணர்வு மற்றும் இயற்கை அறிவுக்காக திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் ஆக்சிஜன் மற்றும் நிழல் தரும் வகையிலான மரக்கன்றுகள் மாணவர்கள் முன்னிலையில் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அனைத்து வியாபாரிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வெங்கடேசன் பங்கேற்று மரக்கன்று நடவை துவக்கி வைத்தார். அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா, பசுமை சரண் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை