உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு

வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில், பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.இங்கு, சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது வழக்கம்.தற்போது, கோவில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், குளத்தின் கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. குளத்தின் அருகே குப்பை தொட்டி இல்லாமல் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவை குளத்தில் வீசி செல்கின்றனர். இதனால், குளத்தின் நீர் மாசடைந்து உள்ளது.எனவே, கோவில் குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்றி, அதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை