‛விடாமுயற்சி ரசிகர்களால் நெரிசல் போக்குவரத்தை சீரமைத்த போலீசார்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில், நடிகர் அஜீத் நடித்த ‛விடாமுயற்சி' திரைப்படம் வெளியானது.பகல் 12:15 மணியளவில் தியேட்டர் முன், திரைப்படத்தை காண்பதற்காக ஆவலுடன் குவிந்த ரசிகர்கள் கூட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், ரசிகர்கள் தியேட்டருக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.