உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அமெரிக்காவில் சோமாஸ்கந்தர் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை

அமெரிக்காவில் சோமாஸ்கந்தர் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்:வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் 'சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில்' உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய். இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.இந்நிலையில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் தலைமையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 8ம் தேதி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீரென விசாரணை நடத்தினர்.இந்நிலையில், கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் மற்றும் இரண்டு போலீசார் நேற்று காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரண்டாவது முறையாக நேற்றும் விசாரணை நடத்தினர்.சிலை தொடர்பான கூடுதல் விபரங்கள் சேகரிக்கவும், ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா எனவும் ஆய்வு செய்த பின் மதியம் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை