உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல் போன் திருட்டு இருவருக்கு போலீசார் வலை

மொபைல் போன் திருட்டு இருவருக்கு போலீசார் வலை

ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில், மொபைல் போன் வாங்குவது போல் நடித்து, கடையின் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, மொபைல் போனை திருடி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரத்தை சேர்ந்தவர் ஆஷிக், 32. சுங்குவார்சத்திரம் ஜங்ஷனில் 'ஆஷிக் மொபைல்ஸ்' என்ற பெயரில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை கடைக்கு வந்த வடமாநில இளைஞர்கள் இருவர், மொபைல் வாங்குவது போல நடித்து, கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, 'மோட்டோ' ரக மொபைல் போனை லாவகமாக திருடி அங்கிருந்து தப்பினர். இது குறித்து, கடையின் உரிமையாளர் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை