போலீஸ் வாகனங்கள் வரும் 24ல் ஏலம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பயன்படுத்தி வந்த நான்குசக்கர ஜீப் வாகனங்கள் முதிர்ந்த நிலை அடைந்து, அரசு பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்து விலை நிர்ணயக்கப்பட்டு உள்ளது.அனைத்து வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ் புத்தகங்களை வட்டார போக்குவரத்து அலுவலகம், காஞ்சிபுரத்தில் ஒப்படைக்கப்பட்டு, நான்கு வாகனங்களையும் பொது ஏலம் விட ஏலக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, பொது ஏலம், நாளை மறுதினம், காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. பொது ஏலத்தில் பங்கு பெறுபவர்கள், நாளை வரை, வாகன பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவரிடம் நுழைவு கட்டணம் 100 ரூபாய் மற்றும் ஏலத்தில் பங்கு கொள்ள முன்பணத் தொகை 1,000 என, 1,100 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பொது ஏலத்தில் பங்கு பெறுபவர்கள், நான்கு காவல் வாகனங்களையும் ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவில் பார்வையிடலாம்.