உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெளிநாட்டு பயணியரோடு பொங்கல் விழா கொண்டாட்டம்

வெளிநாட்டு பயணியரோடு பொங்கல் விழா கொண்டாட்டம்

வாலாஜாபாத்:தமிழகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு, தமிழர்கள் திருநாளான பொங்கல் விழா குறித்து ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில், விளக்கம் அளித்து விழா மேற்கொள்ளப்படுவது வழக்கத்தில் உள்ளது.அதன்படி, நடப்பாண்டில் வெளிநாட்டு பயணியர் இணைந்து பொங்கல் விழா கொண்டாட, வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் தேவேரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்நிகழ்ச்சியில், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் அக்கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அவர்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி, மலர் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கிராம தேவதையான அம்மன் கோவில் வளாகத்தில், பொங்கல் வைக்கும் வைபவம் நடந்தது.இதில் உறியடித்தல், இளவட்டக்கல் துாக்குதல், சாக்குப்பை பந்தயம் ஓட்டம் ஆகியவையும் நடந்தது. மேலும், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் அஜய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேவரியம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை