உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான சிறுபாலத்தால் அழகூர் சாலையில் பள்ளம்

சேதமான சிறுபாலத்தால் அழகூர் சாலையில் பள்ளம்

ஸ்ரீபெரும்புதுார்:அழகூர் சாலையில், சிறுபாலம் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், அழகூர் கிராமத்தில் இருந்து, மாகாணியம், மலைப்பட்டு செல்லும் சாலையில் வழியே, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், அழகூர் விளைநிலங்களுக்கு மத்தியில் உள்ள சிறுபாலத்தில், சமீபத்தில் பெய்த மழையால், மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடைந்து உடைந்து உள்ளது.சாலை நடுவே உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, அழகூர் சாலையில் சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !